சனி, 30 நவம்பர், 2013

சொரியாசிஸ் (psoriasis)மருந்து,காளாஞ்சக படை ,காளாஞ்சக வாதம்,










  • சித்திர மூல ரசாயனம் :

  1. பரங்கி பட்டை 140 gm 
  2. சிவப்பு சித்திரமூலம் 35 gm
  3. சீமை அமுக்குரா 70 gm 
  4. நிலவாகை 35 gm
  5. சாரணை வேர் 35 gm
  6. நிலப்பனங்கிழங்கு 35 gm
  7. கொல்லன்கோவை 35 gm
  8. சிவனார் வேம்பு 35 gm 
  9. சிவதை 10 gm 
  10. முத்தக்காசு 10 gm 
  11. சிறுதேக்கு 10 gm 
  12. சிற்றரத்தை 10 gm 
  13. பால் கருட பச்சை 10 gm 
  14. வாய்விளங்கம் 10 gm 
  15. கல்நார் 10 gm 
  16. காந்த செந்தூரம் 10 gm 
  17. சாத்திரபேதி 10 gm 
  18. நற்சங்கன் வேர் 35 gm
  19. காஞ்சுரைப் பட்டை 35 gm
  20. வெள்ளருகு 35 gm
  21. நன்னாரி 35 gm
  22. மாவிலங்கின் பட்டை 35 gm
  23. சுக்கு 10 gm 
  24. மிளகு 10 gm 
  25. திப்பிலி 10 gm 
  26. ஜாதிக்காய் 10 gm 
  27. ஜாதிபத்திரி 10 gm 
  28. கிராம்பு 10 gm 
  29. கோஷ்டம் 10 gm 
  30. சடாமாஞ்சில் 10 gm 
  31. நறுக்குமுலம் 10 gm 
  32. தாளகம் 10 gm 
  33. கல்சடை 10 gm 
  34. கல்பாசி  10 gm 
  35. கல்மதம் 10 gm 
  36. புனுகு 10 gm 
  37. குங்குமப்பூ 10 gm 
  38. கஸ்துரி 10 gm 
  39. கோரோசனை 10 gm 
  40. சாலாமிசிரி 10 gm 
  41. ரச கற்பூரம் 10 gm 
  42. சீனி 280 gm 
  43. வெல்லம் 210 gm 
  44. தேன் 300 ml 
  45. பசு நெய் 300 ml 

  • மூலிகை வகைகளை முறைப்படி சுத்திசெய்து நன்கு உலர்த்தி வஸ்திரகாயம் செய்யவும்.பாஷண வகைகளை நன்கு சுத்தி செய்து சேர்க்கவும்.வாசனை திரவிய வகைகளை நன்கு கல்வத்தில் போட்டு அரைத்து முன் சூரணத்துடன் கலந்து பின் சீனி,வெல்லம் இரண்டையும் கலந்து மணப்பாகு செய்து அத்துடன் சூரணத்தை கலந்து பிசைந்து,நெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து  இளகலாக  எடுத்து கொள்ளவும்.சீனி வெல்லம் போன்ற வற்றை மணப்பாகு செய்யாமல் உரலிலிட்டு இடித்து பின் சூரணம் கலந்து இடித்து ரசாயனமாக செய்யலாம்.




  • சாப்பிடும் அளவு :

  • 5 gm முதல் 15 gm  அளவு பாலுடன் காலையில் உணவுக்கு முன்னும்,இரவில் இதே அளவு உணவுக்கு பின்னும் சாப்பிடவும்.
  • சிறுவர்,வயது முதிர்தவர்கள் அளவை குறைத்தும் சாப்பிடலாம்.

  • மருந்து உண்ணும் நாள்  அளவு :

    10,20,30,40, என்ற நாள் கணக்கில் மருந்து சாப்பிடவும்.

சொரியாசிஸ் (psoriasis),காளாஞ்சக படை ,வெண்குட்டம்(leucoderma),கருப்பைக் கட்டி போன்ற நோயுடைய நோயாளிகள் 40 நாட்கள் மருந்து அருந்திய பின் 2 மாதம் இடைவெளிக்குக் பின் மறுபடியும்  40 நாட்கள் சாப்பிடலாம்.இவ்வாறு ஓராண்டு,2 ஆண்டுகள் வரை இம்மருந்தைச் சாப்பிட பூரண குணம் பெற இயலும்.

மருந்துணவு :

இம்மருந்து சாப்பிடும் நாட்களில் முட்டை,இறைச்சி,அகத்திக்கீரை,பாகல் காய்,நல்லெண்ணெய்,புளி,முதலியன நீக்கிடல் அவசியம்.இந்த மருந்தை பத்தியமாக சாபிட்டால்  சிறந்த பயனைக் குறுகிய காலத்தில் அடைதல் நிச்சியம். 
  • சொரியாசிஸ் (psoriasis),காளாஞ்சக படை ,காளாஞ்சக வாதம்,விளக்கம்:   
  • தோல் நோய்களில் முக்கியமானது சொரியாஸிஸ் எனப்படும் காளாஞ்சக படை ஆகும். 
  •  சொரியாஸிஸ் நோயில் அதிகமாக தோல் உரிந்து கொண்டே இருக்கும். 
  • வெள்ளை வெள்ளையாக செதில் போல உதிர ஆரம்பிக்கும்.இவ்வாறு தோல் உரிவதற்கான சக்தியை எலும்பிலிருந்து எடுத்துக்கொள்கிறது. இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு வாத நோயாக மாறுகிறது.  இதனால் மூட்டு பாதிப்பு ஏற்படுகிறது. 
  • தலையில் சொரியாஸிஸ் இருந்தால் மினுமினுப்பாக பவுடர் போல் கொட்டும். மண்டை ஓட்டின் மேல் ஒரு படலமாக படர்ந்து சிவந்து காணப்படும்.  முடி இல்லாத பகுதிகளான நெற்றி, காதுமடல் ஓரங்களில் பரவி காணப்படும்.
  • சிலருக்கு அதோடு உடலிலும், முழங்கை, முழங்கால் பகுதிகளில் செதில் செதிலாக உதிரும்.  

  • சிலருக்கு முழங்கை, முழங்கால் பகுதிகளில் வட்ட வட்டமாக படை போல் வந்து செதில் செதிலாக தோல் உதிரும்.  

  • சிலருக்கு முதுகு பகுதியில் அடை போல் கெட்டியான தோலாக மாறி விடும்.  அந்த பகுதியை சுரண்டினால் ரத்தம் வரும் நிலையில் இருக்கும்.  சிலருக்கு உள்ளங்கை, உள்ளங்கால் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு பாதிக்கலாம்.  இதுவும் சொரியாஸிஸ் ஒரு வகையாகும். 

  • சிலருக்கு பாத ஓரங்களில் கூர்மையான பொருளை கொண்டு கீறியது போல வெடிப்பு ஏற்பட்டு தோல் உரிய ஆரம்பித்து, உள்ளங்கால் வரை பரவும் தன்மை கொண்ட சொரியாஸிஸ் உள்ளது. 

  • சித்தர் மூலிகை மருத்துவத்தில் நோய் குணமான பின்பும் நிறம் மாறவும் மீண்டும் வராமல் தடுக்கவும் குறிப்பிட்ட காலம் வரை ரத்தம் சுத்தி செய்ய மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.

  •  மன பதட்டம், டென்சன் காரணமாகவும் சொரியாஸிஸ் வருகிறது. 
  •  அதற்கு டென்சன் குறைய மூலிகை மருத்துவம் செய்யப்படும்.

  • கரப்பான் எனப்படும் தோல் வியாதியில் சிறுசிறு கொப்பளம் உருவாகி, நீர் வடிந்து கறுப்பாக படையாக மாறிவிடும்.  அரிப்பும் அதிகமாக இருக்கும்.  இது அதிகமாக கை, கால்களை பாதிக்கும்.  சிலருக்கு நீர் வராமல் வறட்சியாக கறுப்பான தடித்த படையாக காணப்படும்.  இதற்கு வறட்சி கரப்பான் என பெயர். 


  • சித்தர் மூலிகை மருத்துவத்தில் கரப்பானை முற்றிலும் குணப்படுத்த முடியும்.  படை, பூஞ்சை தொற்று வியாதிகள், திடீரென்று தடிப்பு தடிப்பாக அரிப்புடன் வரக்கூடிய கானாக்கடி ஆகியவையும் மூலிகை மருத்துவத்தில் குணமாகும். 

 முறையான மூலிகை மருந்துகள் தோல் பிரச்னைகளான கரும்படை, உடல் நிறம் மாற்றம், தேமல் போன்றவற்றை முற்றிலும் குணமாக்கும்.